எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் யார்? என ஐக்கிய தேசியக் கட்சி தனித்து முடிவெடுத்தால் கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என எச்சரித்துள்ளார் சம்பிக்க ரணவக்க.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இழுபறி நிலவுவதோடு சஜித் பிரேமதாச தரப்பு மும்முரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதேவேளை, நீண்ட காலமாக நாட்டின் தலைவராகும் திட்டத்துடன் இயங்கி வரும் சம்பிக்க ஐ.தே.கட்சியின் முக்கிய நபர்களுள் ஒருவராக தன்னை நிலை நிறத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், 5ம் திகதி மேலும் கட்சிகளை உள்ளடக்கிய புதிய கூட்டணியை அறிவிக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வருவதுடன் சஜித் தவிர இன்னும் பல தகுதியுள்ள வேட்பாளர்கள் இருப்பதாக அக்கட்சி சார்பில் கருத்து வெளியிடப்பட்டு வருகிறது.
இப்பின்னணியிலேயே சம்பிக்க ரணவக்க இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment