சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதில் இலங்கை அரசாங்கம் பாரபட்சம் இன்றி செயட்பட வேண்டும் என ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கைத் தூதரிடம் வலியுறுத்தியுள்ளது அங்கு இயங்கும் புலம் பெயர்ந்த முஸ்லிம்களின் அமைப்பான SLMDI.
இலங்கைக்கானபிரித்தானிய உயர்ஸ்தானிகர் மனிசா குணசேகரவின் அழைப்பின் பேரில் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பில் வைத்தே இவ்வாறு வலியுறுத்தியதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளதுடன் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளின் போது இலங்கை அரசாங்கம் முஸ்லிம்களை பாதுகாக்க தவறியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலை தொடருமாக இருந்தால் சர்வதேச அழுத்தங்களை உருவாக்க முஸ்லிம் சமூகம் நிர்ப்பந்திக்கப்படும் எனவும் இதன் போது தூதருக்கு எடுத்துக் கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment