2017 மார்ச் மாதமளவில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டையடுத்து சஹ்ரானைப் பிடிப்பதற்கு விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் எனினும் சஹ்ரான் தொடர்ச்சியாக தப்பி விட்டதாகவும் தெரிவிக்கிறது பயங்கரவாத விசாரணைப் பிரிவு.
முஸ்லிம் பொலிஸ் அதிகாரியொருவரும் இதற்கென விசேடமாக நியமிக்கப்பட்டிருந்ததாகவும் எனினும் எவ்விதமான முயற்சியும் கை கூட வில்லையெனவும் நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் அறிந்த முகவரிகள் அனைத்திலும் தேடல் நடவடிக்கை இடம்பெற்றதாகவும் சஹ்ரான் எங்குமே அகப்படவில்லையெனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment