சஹ்ரானுடைய இணையத்தளம் பற்றிய இரு பிரின்ட் அவுட்டுகள் தவிர வேறு எந்த விசாரணை அறிக்கையையும் தராது விசாரணைகளை முறையாமல் செய்யத்தவறியது பயங்கரவாத விசாரணைப் பிரிவு என தெரிவிக்கிறது சட்டமா அதிபர் அலுவலகம்.
விசாரணைக்கான கோப்பை மூடி வைத்திருந்தமைக்கு குறித்த பிரிவும் பொலிஸ் மா அதிபர் பூஜிதவுமே பொறுப்பேற்க வேண்டும் என பிரதி சட்டமா அதிபர் அசாத் நவவி நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையிலேயே சஹ்ரானைக் கைது செய்வதற்கான அனுமதியைக் கொடுத்திருக்கவில்லையென பிரதி சட்டமா அதிபர் மேலும் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment