ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களாக இருந்து கொண்டு பொதுஜன பெரமுன மாநாட்டில் கலந்து கொண்டோருக்கு எதிரான நடவடிக்கை தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் அடுத்த வாரம் கூடவுள்ள மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என அறிவித்துள்ளார் மஹிந்த அமரவீர.
பெரமுனவுடன் இணைந்து கொள்வதில்லையென இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானிக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெரமுன தரப்பு தனியான வேட்பாளரை அறிவித்த பின்னர், இதற்கு மேலும் அவர்களோடு பேசுவதற்கு எதுவுமில்லையென தயாசிறி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment