வெலம்பட பதில் OIC இடை நிறுத்தம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 7 August 2019

வெலம்பட பதில் OIC இடை நிறுத்தம்!



ஈஸ்டர் தாக்குதலையடுத்து பள்ளிவாசல்களில் கைப்பற்றப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள் தொடர்பில் பாரிய சர்ச்சைகள் உருவாகியிருந்தது.



இந்நிலையில் வெலம்பட பள்ளிவாசலிலிருந்து பொலிசார் எடுத்துச் சென்ற 76 கத்திகள் மற்றும் 16 கோடரிகளை அனுமதியின்றி திருப்பிக் கொடுக்க முனைந்தார் என குற்றஞ்சாட்டப்பட்டு, அப்பகுதி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பந்துல பண்டார இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட அதிகாரிகளின் அனுமதியின்றி தன்னிச்சையாக செயற்பட முனைந்ததாக குறித்த நபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமையும் பெரும்பாலான பள்ளிவாசல்களில் குர்பான் செயற்பாட்டுக்காக இவ்வாறு கத்திகள் வைக்கப்படும் வழக்கம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment