தமிழ்நாடு, கோயம்புத்தூர் பிரதேசத்துக்குள் இலங்கை ஊடாக லக்ஷர் ஈ தய்பா அமைப்பின் தீவிரவாதிகள் ஆறு பேர் நுழைந்துள்ளதாகக் கூறி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.
இக்குழுவில் ஒரு பாகிஸ்தானியரும் ஐந்து இலங்கைத் தமிழரும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் இலங்கையில் உள்ள பாக் தூதரகம் செயற்படுவதாக இந்தியா நீண்டகாலமாக குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இவ்வெச்சரிக்கை பரபரப்பு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment