தேசிய மக்கள் சக்தியெனும் அமைப்பூடாக மக்கள் சக்தியை ஒன்று திரட்டித் தமது கன்னிப் பிரச்சாரக் கூட்டத்தை நடாத்தியுள்ள மக்கள் விடுதலை முன்னணி சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அக்கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லக் கூடிய சிறந்த வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவே சிறந்த தெரிவு என கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர் ஏழைகளின் தோழன் என பேச்சாளர்கள் வர்ணித்துள்ளனர்.
இந்நிலையில், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திசாநாயக்க போட்டியிடுவது உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment