பொதுஜன பெரமுன வேட்பாளரே உள்ளதில் பலவீனமானவர் என தெரிவிக்கிறார் மக்கள் விடுதலை முன்னணியின் விஜித ஹேரத்.
கோட்டாவை வேட்பாளராக அறிவித்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லையெனவும் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக இது பற்றிய பேச்சு நிலவி வந்த நிலையில் அது குறித்த ஆர்வம் குறைந்தே இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கோட்டாபே ராஜபக்சவின் நியமனம் பௌத்த உயர் பீடத்தின் அறிவுரைகளுக்கும் எதிரானது எனவும் எவ்வித குற்றச்செயல்களின் பின்னணியும் இல்லாத நபர் ஒருவரை முன் நிறுத்த பெரமுன தவறிவிட்டது எனவும் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment