ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் தடை செய்யப்பட்டிருக்கும் அமைப்பின் அநுராதபுர பிரதானியென கருதப்படும் நபரை இன்று கைது செய்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த நபரும் நுவரெலியாவில் சஹ்ரானோடு ஆயுதப் பயிற்சி பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஜமாத்தே மில்லத் இப்ராஹீம் என அறியப்படும் அமைப்புகள் கூட்டிணைந்தே ஈஸ்டர் தாக்குதலை நடாத்தியதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment