ஈஸ்டர் தாக்குதலையடுத்து, தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் இணைத்து இலங்கையில் கைது செய்யப்பட்ட JMI எனும் அமைப்பை பல்கலை மட்டத்தில் பிரச்சாரப்படுத்திய தென்கிழக்கு பல்கலை மாணவன் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்து.
இதேவேளை, குறித்த அமைப்பின் கிழக்கு மாகாண பொறுப்புதாரியாக செயற்பட்டதாகக் கருதப்படும் நௌசாத் உமர் என அறியப்படும் நபரும் கைது செய்யப்பட்டுளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஜமாத்தே மில்லத் இப்ராஹிம் ஆகிய இரு அமைப்புகளைச் சேர்ந்தவர்களே கூட்டிணைந்து ஈஸ்டர் தாக்குதல்களை நடாத்தியதாக நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment