கூட்டாட்சி அரசு பதவியேற்றதும் மஹிந்த ஆட்சிக்காலத்தில் பதவியில் இருந்தவர்களுக்கு ஏற்படுத்திய களங்கத்திற்கான கணக்கு ஆட்சி மாறியதும் தீர்க்கப்படும் என தெரிவிக்கிறார் பெரமுனவின் முன்னாள் பினாமி தலைவர் ஜி.எல். பீரிஸ்.
ஆட்சி மாறியதும் அவை அனைத்துக்குமான இழப்பீட்டைத் தமது தரப்பு பெற்றுக்கொள்ளும் என அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
முன்னைய ஆட்சியாளர்கள் மீது சோடிக்கப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லையெனவும் அவ்வாறு வேண்டுமென்று மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களுக்கு இழப்பீடு பெற்றுக் கொள்ளப்படும் எனவும் பீரிஸ் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment