சட்டவிரோத கருத்தடை, சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்துக் குவிப்பு போன்ற குற்றச்சாட்டுகளுக்குள்ளாகியுள்ள மருத்துவர் ஷாபிக்கு எதிரான வழக்கின் விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் குற்றப் புலனாய்வுப்பிரிவினர் தமது தரப்பு அறிக்கையை சமர்ப்பித்திருந்த நிலையில் வழக்கின் விசாரணை டிசம்பர் 12ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த தவணையிலேயே ஷாபி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment