மருத்துவர் ஷாபி விவகாரத்தில் சர்ச்சையை உருவாக்கியவர்களுள் ஒருவராகக் கணிக்கப்படும் குருநாகல் டி.ஐ.ஜி கித்சிறி ஜயலத்தை திருகோணமலைக்கு இடமாற்றம் செய்துள்ளது பொலிஸ் ஆணைக்குழு.
குருநாகல் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், டி.ஐ.ஜி மற்றும் சிலரின் தூண்டுதலிலேயே மருத்துவர் ஷாபி விவகாரம் சர்ச்சையாக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இந்நிலையில், கித்சிறிக்கு எதிரான முறைப்பாடுகளை விசாரித்த பொலிஸ் ஆணைக்குழு உடனடியாக இடமாற்றம் செய்துள்ளது.
பொலிஸ் மா அதிபரின் அனுமதியின்றி ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கியதுடன் இவ்விவகாரத்தை ஊதிப் பெருப்பித்ததில் கித்சிறிக்கு பங்குண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment