ஜுன் 30ம் திகதி வரை அமெரிக்க பிரஜாவுரிமையைக் கை விட்ட அல்லது பிரஜாவுரிமை நீக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் கோட்டாபே ராஜபக்சவின் பெயர் இல்லாததால் தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து விசனம் வெளியிட்டுள்ள நாமல், தேவைப்பட்டால் ஆவணங்களைக் காட்டத் தாம் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார்.
பெரமுன வேட்பாளர் பற்றி கவலைப்படத் தேவையில்லை, தேவையேற்படின் ஆதாரபூர்வமான ஆவணங்கள் முன் வைக்கப்படும் என அவர் விளக்கமளித்துள்ள அதேவேளை, இவ்வருடத்தின் இரு பட்டியல்களிலும் கோட்டாபேவின் பெயர் உள்ளடக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment