இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு எனக் கூறி அதற்கேற்ப எதையும் செய்யத் தயாராகவுள்ள, பல வழக்குகள் நிலுவையில் உள்ள ஒருவரை உண்மையான தமிழன் ஒரு போதும் ஆதரிக்க மாட்டான் என தெரிவிக்கிறார் முன்னாள் வட மாகாண முதல்வர் சி.வி. விக்ணேஸ்வரன்.
கோட்டா பதவிக்கு வந்தால் இலங்கை மீண்டும் இருண்ட யுகம் நோக்கிச் செல்லும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
தான் ஒரு போதும் கோட்டாவை ஆதரிக்கப் போவதில்லையென தெரிவிக்கின்ற விக்ணேஸ்வரன் மஹிந்த ராஜபக்ச ஏன் இவ்வாறான ஒரு முடிவை எடுத்தார் என தனக்கு ஆச்சரியமாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment