கொழும்பில் வாழும் மேல் தட்டு வர்க்க மக்களின் வாக்குகளால் மாத்திரம் ஜனாதிபதி தேர்தலை வெல்ல முடியாது என தெரிவிக்கின்ற அமைச்சர் அஜித் பி. பெரேரா, சஜித் போன்ற அடி மட்ட மக்களின் மனதையும் வென்ற தலைவராலேயே வெற்றியீட்ட முடியும் என தெரிவிக்கிறார்.
மேற்கு நாட்டில் கல்வி பயின்றாலும் அடி மட்ட மக்களின் நாடித் துடிப்பறிந்த தலைவராக செயற்படும் சஜித் பிரேமதாசவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றியைக் கொண்டு வரக்கூடியவர் எனவும் அவரே வேட்பாளராக வேண்டும் எனவும் அஜித் மேலும் தெரிவிக்கிறார்.
பெரமுன வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபே தனது பிரச்சார நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment