ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாராக இருந்தாலும் அக்கட்சி பிளவுறுவதைத் தவிர்க்க முடியாது என சூளுரைத்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.
கூட்டணியமைத்து தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் ஐக்கிய தேசியக் கட்சி, தமது வேட்பாளர் அறிவிப்பில் திணறிக்கொண்டிருப்பதாக பரவலாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சஜித் பிரேமதாச தன்னை வேட்பாளராக்குவதற்கான காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறார்.
எனினும், யார் வேட்பாளராக வரினும் கட்சி பிளவுறுவது மாத்திரம் நிச்சயம் என மஹிந்த தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment