செப்டம்பர் 1 முதல் 10ம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச வருடாந்த போரா சமூக மாநாட்டின் பின்னணியில் கொழும்பு மற்றும் புற நகர்ப்பகுதிகளில் ஹோட்டல்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் நாற்பது நாடுகளைச் சேர்ந்த 21,000 போரா சமூக உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் இலங்கை சுற்றுலாத்துறை இதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளதுடன் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொழும்பு - 3ல் இடம்பெறவுள்ள இந்நிகழ்வு நாட்டின் சுற்றுலாத்துறைக்கு முக்கியமானது என தெரிவிக்கப்பட்டு வசதி வாய்ப்புகள் செய்தி கொடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment