"1994 ஜனாதிபதி சந்திரிக்காவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன சமுர்த்தி திட்டம் வறுமையை நீக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டாலும் அது வழங்கப்பட்டது கட்சி அடிப்படையிலாகும். ஆயினும் ஒரு சில தசாப்தங்களுக்குப் பிறகு நாங்கள் அரசு என்ற வகையில் சமுர்த்தியினை 6 இலட்சம் பேருக்கு வழங்கும் போது ஶ்ரீ லங்கா என்றோ யு.என்.பி. என்றோ பாராது வறுமையைப் பார்த்தே வழங்கி வருகிறோம்" என்று பொது நிர்வாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
திங்கட்கிழமை (12) படல்கும்புர (மொனராகலை மாவட்டம்) பிரதேசத்தில் நடைபெற்ற சமுர்த்தி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், "அன்று டட்லி சேனாநாயக்க அவர்கள் இரண்டு ஸேரு அரிசி வழங்க வாக்குறுதி அளிக்கும் போது, சிறிமா சந்திரனில் இருந்து அரிசி கொண்டு வருவதாக கதை கூறினார். பின்னர் ஜனாதிபதி ப்ரேமதாச அவர்கள் ஜனசவிய வேலைத்திட்டத்தின் மூலம் ரூபா 2500 வீதம் வழங்கினார். இந்த முறைமை சந்திரிக்கா யுகத்தில் சமுர்த்தி என்று மாறியது. அன்று இந்த வேலைத்திட்டம் வறுமையை நீக்கவே ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும் அன்று பிரதிபலனின்றி கட்சி, நிறம் பார்த்தே வழங்கப்பட்டது. அன்று சமுர்த்தி எடுத்தவர்கள் இன்னும் சமுர்த்தி எடுக்கிறார்கள். இதனால் எங்களது அரசாங்கம் அநீதியிழைக்கப்பட்ட 6 இலட்சம் பேருக்கு சமுர்த்தி வழங்க தீர்மானித்தது.
இப்போது எமது இலக்கை வென்றுள்ளோம். அன்று சமுர்த்திக்காக 13 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. ஆனால் நாங்கள் இன்று 50 பில்லியன் செலவளித்துள்ளோம். சுமார் 20 வருடங்களாக மஹிந்த அரசு, சந்திரிகா அரசினால் வெட்டப்பட்ட சுமார் 6 பேருக்கான சமுர்த்தியினை நாங்கள் வழங்கி வருகிறோம். எமது இலக்கு, இன்று சமுர்த்தி பெறும் உங்களுக்கு எப்போதும் சமுர்த்தி இல்லாமல் அதிகாரம் அளித்தலாகும்."
இந்நிகழ்வில் 1935 பேருக்கு சமுர்த்தி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-கஹட்டோவிட்ட ரிஹ்மி
No comments:
Post a Comment