முன்னாள் ஆட்சியாளர்களின் குணாதிசயங்கள் ஒருபோதும் மாறப் போவதில்லையென தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
நாட்டின் நலன் காப்பதை விட குடும்ப நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தே மஹிந்த தரப்பு அனைத்து காரியங்களையும் செய்து வருவதாக சுட்டிக்காட்டுகின்ற அவர், ஊர்க்குருவி ஒரு போதும் பருந்தாகாது என தெரிவித்துள்ளார்.
பத்து வருட ஆட்சிக்காலத்தில் அவர்களால் செய்ய முடியாத எதை இனியும் செய்ய முடியும் என்று சிந்தித்தே மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ரணில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment