சிறுபான்மை சமூகத்தின் ஆதரவின்றி பெரும்பான்மை மக்களின் வாக்குகளிலேயே வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு பெரமுன இயங்கி வருவதாக கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்து வரும் நிலையில் அண்மையில் ஏற்பட்ட சர்ச்சையைக் களைய தமிழ் தலைமைகளோடு கூட்டணி அமைக்க கோட்டாபே ராஜபக்ச தீவிரம் காட்டி வருவதாக அவரது சார்பு தளங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வட - கிழக்கு மற்றும் மலையக தமிழ் தலைமைகளோடு கூட்டணி அமைப்பது பற்றி தீவிர பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரமுன வேட்பாளர் அறிவிப்பு நாளை எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் அது மேலும் தாமதிக்கப்படலாம் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment