வானில் தோன்றிய மர்மப் பொருள்: பிரதேச மக்கள் அச்சம் - sonakar.com

Post Top Ad

Sunday, 18 August 2019

வானில் தோன்றிய மர்மப் பொருள்: பிரதேச மக்கள் அச்சம்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை, கிண்ணையடி, கும்புறுமூலை, ஓட்டமாவடி, மீராவோடை, மாஞ்சோலை, உட்பட்ட பல பிரதேசங்களில் வான்பரப்பில் வெள்ளை நிறத்திலான மர்ம பொருள் இன்று ஞாயிற்றுக்கிழமை காணப்படுவதை கண்டு மக்கள் அச்சமடைந்து காணப்படுகின்றனர்.


வெள்ளை நிறத்திலான பஞ்சு அல்லது சிலந்தி வலை போன்ற மர்ம பொருள் வான்பரப்பில் பறந்து திரிவதையும், சிலரது வீடுகள் மற்றும் மரங்களில் மேல் காணப்படுகின்றமையால் பிரதேச மக்கள் அச்சத்துடன் குறித்த மர்ம பொருளை அவதானித்து வருகின்றனர்.

பஞ்சு வகை போன்ற குறித்த பொருளை சிலர் கையிலெடுத்து பார்த்த போது அவை மென்மையாக காணப்படுவதாகவும், குறித்த மர்ம பொருளில் சிறு பூச்சி இனங்கள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாகவும் பார்த்த சிலர் தெரிவிக்கின்றனர்.

குறித்த மர்ம பொருளினை பிரதேசத்திலுள்ள சிறுவர்கள் கையில் எடுத்து அதனை சேகரித்து விளையாடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

மேலும் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக மழை, காற்று மற்றும் இடி மின்னல் காணப்படுவதால் நாட்டில் ஏதும் பாரிய அனர்த்தம் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கலாம் என்று பிரதேச மக்கள் அச்சம் கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

-Murshid


No comments:

Post a Comment