கொழும்பிலிருந்து கழிவுகளை அருவக்காடு கொண்டு செல்வதற்கு இருந்த தடை நீங்கியுள்ளதாகவும் அதனடிப்படையில் இன்று முதல் கழிவுகள் அங்கு அனுப்பப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது கொழும்பு மாநகர சபை.
வனாத்தவில்லும் பிரதேச சபையினால் பராமரிக்கப்படும் வீதிகள் ஊடாகவே போக்குவரத்து இடம்பெறவிருந்த நிலையில் பாரிய வாகனங்கள் செல்வதனால் ஏற்படக்கூடிய இழப்புகள் மற்றும் சேதங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அருவக்காடு பகுதிக்கு கொழும்பிலிருந்து குப்பைகள் கொண்டுவரப்படுவதற்கு எதிராக புத்தளத்தை மையமாகக் கொண்டு தொடர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment