ஒழுக்காற்று விசாரணை நடாத்துமளவுக்கு சுஜீவ சேனசிங்கவோ அஜித் பெரேராவோ தவறேதுமிழைத்ததாகக் தான் கருதவில்லையென கருத்து வெளியிட்டுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் கபீர் ஹாஷிம்.
இதேவேளை, இவ்வாறான விசாரணைகள் பெரும்பாலும் விளக்கம் தரப்பட்டதும் முடிவுற்றுவிடும் எனவும் அதனைப் பெரிது படுத்தத் தேவையில்லையெனவும் கபீர் மேலும் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவே வேட்பாளராக்கப்பட வேண்டும் என குறித்த இருவரும் பகிரங்கமாக கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment