நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றின் அடிப்படையில் கம்போடியா சென்றுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
இரு நாட்டு உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் விஜயம் அமைந்துள்ளதாகவும் அங்கு பல கட்ட பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி ஈடுபடவுள்ளதாகவும் அவரது ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியின் வெளிநாட்டு பிரயாணங்களின் போது ஆங்காங்கு இனவன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment