ஊழல் - முறைகேட்டு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் சதொச பதில் பொது முகாமையாளருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2002ல் அரிசி இறக்குமதியில் இடம்பெற்ற முறைகேடுகள் ஊடாக அரசுக்கு 4 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியதன் பின்னணியில் இவ்வழக்கு இடம்பெற்று வந்தது.
இந்நிலையிலேயே முன்னாள் பதில் பொது முகாமையாளர் விமல் பெரேராவுக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் 50,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment