ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக வேறு யார் வந்தாலும் எதிர்க்கட்சி அதனை சமாளிக்கும் ஆனால் சஜித் பிரேமதாச வந்தால் போட்டி கடுமையாக இருக்கும் என்கிறார் வாசுதேவ நானாயக்கார.
ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இணக்கப்பாடொன்றை எட்ட முடியாதிருக்கும் நிலையில் சஜித் ஆதரவு அணி தீவிர பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
நாளைய தினம் இடம்பெறவிருந்த கூட்டணி ஒப்பந்தமும் பின் போடப்பட்டுள்ள நிலையில், சஜித் வருவதே சவாலாக இருக்கும் என வாசுதேவ தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment