அனைத்து மக்களையும் பாதுகாப்பது என் பொறுப்பு: இராணுவ தளபதி - sonakar.com

Post Top Ad

Monday, 26 August 2019

அனைத்து மக்களையும் பாதுகாப்பது என் பொறுப்பு: இராணுவ தளபதி



எந்தவொரு தனி இனத்தையும் பாதுகாப்பது தனது கடமையில்லையெனவும் தான் அனைத்து மக்களுக்குமான இராணுவ தளபதியொன்கின்ற அடிப்படையில் அனைவரையும் பாதுகாப்பது தனது கடமையெனவும் தெரிவிக்கிறார் புதிய இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா.



இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவரது நியமனம் குறித்து தமிழ் மக்கள் அதிருப்தி வெளியிட்டிருப்பது தொடர்பில் வினவப்பட்ட போதே அவர் இவ்வாறு பதிலளித்திருந்தார்.

ஐ.நா மற்றும் அமெரிக்காவும் இவரது நியமனம் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment