![](https://i.imgur.com/nyZ37qI.jpg?1)
இன்று காலை இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய சம்பவத்தின் பின்னணியில் நான்கு ஊழியர்கள் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை நோக்கிப் பயணித்த 741ம் இலக்க ரயில், கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கிப் புறப்பட்ட 412ம் இலக்க ரயிலுடன் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும், பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் களுத்துறை ரயிலின் சாரதி, உதவியாளர், பாதுகாவலர்கள் உட்பட நால்வரே பணியிலிருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment