ஈஸ்டர் தாக்குதலையடுத்து பதவி விலகியிருந்த அமைச்சர் குழுவில் எஞ்சியிருந்த அலி சாஹிர் மௌலானா மற்றும் பைசல் காசிம் இன்று தமது இராஜாங்க அமைச்சு பதவிகளில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முஸ்லிம் தலைமைகளுக்கு எதிரான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் நிமித்தம் ஜுன் 3ம் திகதி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியிருந்தனர்.
முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காணப்படும் வரை தாம் பதவிகளை ஏற்கப் போவதில்லையென முன்னதாக தெரிவிக்க்ப்பட்டிருந்த நிலையில் தற்போது ஹரீஸ் தவிர்ந்து ஏனையோர் மீண்டும் பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment