மஹிந்த ராஜபக்சவின் 'தானே' ராஜாவாக இருக்க வேண்டும் எனும் பேராசையே கோட்டாபே ராஜபக்சவுக்கு வேட்பாளராவதற்கு இருக்கும் பாரிய தடை என தெரிவிக்கிறார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.
தானும் தன் வாரிசுகளும் ஆள வேண்டும் என மஹிந்த ராஜபக்ச நினைப்பதனாலேயே வேட்பாளளை அறிவிப்பதில் பெரமுன தயங்குவதாகவும் அதேவேளை கட்சியொன்றின் நிலைப்பாட்டுக்காக உழைப்பவர் இருப்பின் அவரை முற்படுத்துவதில் சிக்கல் இருக்காது, ஆயினும் ஐக்கிய தேசியக் கட்சியிலும் தனி நபர் இழுபறி தொடர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி தலைவரையே அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதற்கு கட்சி மட்டத்தில் இணக்கப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment