
டுபாயில் கைதாகி நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிபானை இம்ரானின் பொலிஸ் தொடர்புகள் பற்றி ஆராயப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பலருக்கு குறித்த நபருடன் தொடர்பிருப்பதாக ராவணா பலயவின் மாகல்கந்தே சுகந்த தேரர் முன் வைத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தொடர்பு வைத்திருப்பவர்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக கொழும்பு மாவட்ட டி.ஐ.ஜி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment