எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய பாதுகாப்பு பற்றிய அக்கறையுள்ளவருக்கே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கப் போவதாக தெரிவிக்கிறார் நிமல் சிறிபால டி சில்வா.
இன்றைய நிலையில் நாட்டின் இறையான்மையில் வெளிநாட்டுத் தலையீடு அதிகரித்து விட்டதாகவும் இராணுவ தளபதியாக யார் வர வேண்டும் என்பதிலும் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்ற அவர், இவ்வாறு அச்சுறுத்தல்களுக்கு அடி பணியாது தேசிய பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு செயற்படுபவரையே சுதந்திரக் கட்சி ஆதரிக்கும் என அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, கோட்டாபே தேர்தலில் வென்றால் அவரது மனைவியான அமெரிக்க பிரஜையே இந்நாட்டின் முதற்பெண்மணியாக வர நேரிடும் என ரஞ்சன் ராமநாயக்க எச்சரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment