இலங்கையின் புராதன நிலங்கள் இலங்கைக்கு உரியதே தவிர, அவை மத்திய கிழக்கிலிருந்து முஸ்லிம்களால் கொண்டு வரப்படவில்லையென தெரிவிக்கிறார் ஞானசார.
இன்றைய தினம் பலங்கொட நகரில் ஞானசாரவின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது சமுலுவ நிகழ்வில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்ததுடன் இப்பூமியின் புராதன நிலங்களை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் போராடுவது பௌத்தர்களின் கடமையெனவும் தெரிவித்துள்ளார்.
கண்டியையடுத்து இன்று பலங்கொடயில் இவ்வாறான நிகழ்வு இடம்பெற்றுள்ள அதேவேளை தேர்தல் கால பதற்றத்தை உருவாக்குவதில் இனவாத தரப்புகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment