ஈஸ்டர் தாக்குதல்களை விசாரணை செய்து வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பதவிக்காலம் செப்டம்பர் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இம்மாத இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறித்த குழுவினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இக்கால நீடிப்பு இறுதி அறிக்கையை இழுத்தடிப்பதற்கான நடவடிக்கையென ஜே.வி.பி தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment