சஹ்ரானிடம் ஆயுத பயிற்சி பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இரு மௌலவிமார் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஹெட்டிபொல ஜும்மா பள்ளிவாயலைச் சேர்ந்த முஹமத் ஹனீபா முஹமத் ரிஸ்மி (28) மற்றும் நிக்கவரட்டிய ஜும்மா பள்ளிவாசலைச் சேர்ந்த முஹமத் நசார் முஹமத் நிம்சாட் (29) ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சஹ்ரானின் தீவிரவாத சிந்தனைக்குள் ஈர்க்கப்பட்டு நுவரெலியவில் பயிற்சி பெற்றதாக பலர் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment