ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனையின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபாய ராஜபக்ஷ என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை காண முடிகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனையின் தேசிய மாநாடு இன்று மாலை சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற போது எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ என உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டமையைத் தொடர்ந்து கொழும்பு புற்கோட்டை அரசமரத்தடி சந்தியில் இன்று மாலை 4.30 மணியளவில் ஆதரவாளர்கள் பெருமளவான பட்டாசுகள் கொழுத்தி கோத்தாபாயவினதும், மஹிந்த ராஜபக்ஷவினதும் உருவப்படங்களை ஏந்தியவாறு மேளதாளங்களுடன் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-ஏ.எஸ்.எம்.ஜாவித்
No comments:
Post a Comment