கோட்டாபே பதுளை நகரில் கூட்டமொன்றுக்கு வரப் போவதாக உள்ளூர் அரசியல்வாதியொருவர் சுவரொட்டிகள் ஊடாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அவ்வாறு ஒன்று நடந்தால் 125 கிலோ எடையுள்ள தான் மணிக்கூட்டு கோபுரத்தின் மேலே தலை கீழாக நிற்கப் போவதாக சொல்கிறார் ஊவா முதல்வர் சாமர சம்பத் திசாநாயக்க.
நாளைய தினம் அங்கு பொதுக் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அதற்கு கோட்டாபே ராஜபக்ச வரவுள்ளதாகவும் பெரமுன உறுப்பினர் ஒருவர் மேற்கொண்டு வரும் பிரச்சாரம் குறித்தே முதல்வர் இவ்வாறு விசனம் வெளியிட்டுள்ளார்.
எனினும் அக்கூட்டத்தில் கோட்டாபே கலந்து கொள்ளப் போவதில்லையென சாமர தெரிவிக்கின்ற அதேவேளை அண்மையிலேயே ஹரின் தலைமையில் சஜித் பிரேமதாசவின் பொதுக் கூட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment