ஜனாதிபதி சாட்சியமளித்ததும் தெரிவுக்குழு அறிக்கை! - sonakar.com

Post Top Ad

Wednesday, 14 August 2019

ஜனாதிபதி சாட்சியமளித்ததும் தெரிவுக்குழு அறிக்கை!


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை, நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சாட்சியமளித்ததும் நிறைவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



எதிர்வரும் வாரத்தில் ஒரு நாள் ஜனாதிபதியின் வருகை எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை அவர் தெரிவு செய்வதற்கு மூன்று தினங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சரத் பொன்சேகா விளக்கமளித்துள்ளார்.

அண்மையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவுக்கு முன் ஆஜராகி சாட்சியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment