சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற, தடை செய்யப்பட்டுள்ள ஜமாத்தே மில்லத் இப்ராஹிம் அமைப்பைச் சேர்ந்த 'அபு இக்ரிமா' எனும் புனைப் பெயர் கொண்ட ரபாய்தீன் முஹமத் அலி எனும் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கம்பளை, வெம்பொடயைச் சேர்ந்த குறித்த நபர் அம்பாறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரச புலனாய்வுத் தகவல் அடிப்படையிலேயே இக்கைது இடம்பெற்றதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக இவ்வாறு பல கைதுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment