தமது ஆட்சியில் எந்தவொரு இனத்துக்கும் அநீதியிழைக்கப்படவில்லையெனவும் எந்தவொரு சமயத்தையும் அவமதித்தில்லையெனவும் தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
பெரமுனவின் பினாமி தலைவரான ஜி.எல். பீரிசிடமிருந்து கட்சித் தலைமையைப் பெற்றுக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவிக்கின்ற அதேவேளை இந்த அரசு அனைத்து சமயங்களுக்கும் அநீதியிழைத்திருப்பதாகவம் பௌத்த தர்மத்தை வீழ்த்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.
தான் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்கும் நாளுக்காக நாடே காத்திருந்ததாகவும் மஹிந்த தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment