இந்த நாட்டு மக்களை ஆள்வதற்கு அமெரிக்காவிலிருந்து ஒருவரை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையில்லையென தெரிவிக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே.
தான் முறைப்படி அரசியலில் மக்கள் அங்கீகாரத்தைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் கோட்டாவைத் தோற்கடிக்கத் தானே போதும் எனவும் தெரிவிக்கின்ற அவர் மீண்டும் இருண்ட யுகத்துக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
வெள்ளை வேன் கடத்தல்கள், ஊடகவியலாளர் கொலைகள் அச்சுறுத்தல்களோடான நாட்டு நிலைமையை மக்கள் மீண்டும் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment