ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச வருவதையே தானும் விரும்புவதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
நாட்டில் இன்னும் துப்பாக்கிகள், குண்டுகள் கைப்பற்றப்பட்டு வருகின்ற நிலையில் அரசு முன்னுக்குப் பின்னான முரண்பாடுகளை வெளியிட்டு வருகிறது. அத்துடன் கைதுகளும் தொடரும் நிலையில் அவசர கால சட்டம் நீக்கப்பட்டமை கேள்விக்குறியானது எனவும் அவர் தெரிவிக்கிறார்.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி பல கூறுகளாக பிரிவதற்குத் தயாராக இருப்பதாகவும் தான் சஜித் வேட்பாளராவதையே விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment