முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு கம்பஸ் தனியார் பல்கலைக்கழகத்தினை அரசுடமையாக்கக் கோரி பிராந்தியத்தில் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கிய அம்பிட்டியே சுமன மற்றும் உண்ணாவிரதம் புகழ் அத்துராலியே ரதன தேரர் இணைந்து கவனயீர்ப்பொன்றை இன்று நடாத்தியிருந்தனர்.
மட்டக்களப்பு கோட்டை முனை பகுதியிலிருந்து நகர்ப்பகுதி வரை இப்பேரணி இடம்பெற்றிருந்த அதேவேளை கணிசமான அளவு பௌத்த துறவிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
முன்னதாக கிரான் பகுதியிலேயே பேரணி நடாத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment