ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகும் எதிர்பார்ப்புடன் தனது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சஜித் பிரேமதாச, தான் மக்களுக்காக எந்நேரமும் உயிரை விடவும் தயார் என தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் பதுளையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், தந்தையின் வழியில் எதிர்வரும் நவம்பரில் தான் நாட்டின் தலைவராகும் இலக்கை அடையவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பெரமுன தரப்பில் கோட்டாபே ராஜபக்ச வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சஜித் பிரேமதாச மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment