ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு தொடர்ந்தும் தாமதமாகி வரும் நிலையில் சஜித் பிரேமதாச பற்றி நல்லெண்ணம் வெளியிட்டு வரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்குமிடையில் நேற்று முன் தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.
இச்சந்திப்பில் வைத்து, மைத்ரிபால சிறிசேன சஜித்துக்கு ஆதரவளிக்கக் கூடாது என சந்திரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளதோடு 2015ல் போன்று ராஜபக்சாக்களைத் தோற்கடிப்பதற்கு ஒன்றிணைய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்ததாக தகவல் மூலம் ஒன்று தெரிவிக்கிறது.
இந்நிலையில், மைத்ரிபால சிறிசேன இன்னொரு தடவை போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையெனவும் சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment