ஜனாதிபதி சென்ற ஹெலியால் இரு கடைகள் சேதம் - sonakar.com

Post Top Ad

Friday, 16 August 2019

ஜனாதிபதி சென்ற ஹெலியால் இரு கடைகள் சேதம்


நாஉலயிலிருந்து ஜனாதிபதியை ஏற்றிக் கொண்டு மேலெழுந்த உலங்கு வானூர்தியால் அப்பகுதியில் இரு கடைகள் சேதமுற்ற சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.



உலங்கு வானூர்தி விசிறியின் பலத்த காற்றினாலேயே கடையின் கூரைகள் கழன்று விழுந்துள்ளதுடன் ஒரு வர்த்தக நிலைய உரிமையாளர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளச் சென்று ஜனாதிபதி திரும்புகையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment