பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோட்டாபே ராஜபக்ச நியமிக்கப்படுவதற்கு மஹிந்த அணியின் பிரமுகர்கள் சிலர் முன்னரே எதிர்ப்பு வெளியிட்டிருந்த நிலையில் நிசாந்த முத்துஹெட்டிகம பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்.
ஒரு காலத்தில் இராணுவ அதிகாரியாகவும் பின்னர் பாதுகாப்பு செயலாளராகவும் இருந்த கோட்டாவுக்கு மக்களோடு எவ்வித தொடர்புமில்லையெனவும் மக்கள் பிரச்சினைகள் பற்றி எவ்வித தெளிவும் இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ஆட்சியில் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டா அமைச்சர்களுடன் ஒத்துழைத்து இயங்க மறுத்து வந்த நபர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment