ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணிக்குள் சஜித் பிரேமதாசவுக்கு பெரும்பான்மை ஆதரவற்ற நிலை காணப்படுவதாக கட்சி முக்கியஸ்தர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித்துக்கு ஆதரவு வெளியிட்டுள்ள போதிலும் ஜே.வி.பி தவிர்ந்து 119 எம்.பிக்களைக் கொண்ட கூட்டணியில் மேலும் 64 பேர் இன்னும் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கவில்லையென சுட்டிக்காட்டப்படுகிறது.
ஸ்ரீலமுகா மற்றும் அஇமுகா தரப்பினர் தற்சமயம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்திருக்கின்ற அதேவேளை தேர்தல் நிலைப்பாடு பற்றி இன்னும் வெளிப்படையாகப் பேசவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment